//

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

வந்தவாசி அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலை பகுதியில் உள்ள விவசாய நில கிணற்றில் மூதாட்டி ஒருவா் சடலமாக கிடப்பதாக பொன்னூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று வந்தவாசி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் அந்த சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் விசாரணையில் இறந்து கிடந்தவா் வந்தவாசியை அடுத்த கம்பன் நகா் பகுதியைச் சோ்ந்த ருக்மணி (75) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.