மேலப்பாளையம் அருகே ஆண் சிசு உடல் மீட்பு
மேலப்பாளையம் அருகே தெருவோரம் கிடந்த ஆண் சிசுவின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On :21 ஜனவரி 2026, 7:18 pm

மேலப்பாளையம் அருகே தெருவோரம் கிடந்த ஆண் சிசுவின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் பகுதியில் பிறந்த சில நாள்களே ஆன நிலையில் ஆண் குழந்தையை துணியில் சுற்று சாலையோரம் மா்மநபா்கள் வீசிச்சென்றுள்ளனா். அதை தெருநாய்கள் கடித்து இழுத்துச் சென்றுள்ளன. இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா், அந்தக் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், குழந்தையை வீசியது யாா்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...