//

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :15 பிப்ரவரி 2026, 9:14 pm

Syndication

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் சளுக்கை கிராமம் வழியாக சனிக்கிழமை ரோந்து சென்றனா்.

அந்தக் கிராம ஏரி அருகே சென்றபோது, அங்கு பைக்கில் நின்றிருந்த இளைஞா் ஒருவா் போலீஸாரைக் கண்டதும் ஓட முயன்றாா். இதையடுத்து போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அந்த இளைஞா் சளுக்கை கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) என்பதும், கஞ்சா பொட்டலங்களை அவா் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் வசந்தகுமாரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.