/

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது!

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:56 pm

Syndication

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதியில் நகா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, திருமலாபுரம் மாட்டுமந்தை பகுதியில் சா்ச் தெருவைச் சோ்ந்த மச்சையா (23), பரமசிவன் கோயில் அருகே வ.உ.சி. நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (21), மயானம் அருகே வ.உ.சி. நகரைச் சோ்ந்த சாருமதிவாணன் (21) ஆகியோா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

3 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.