டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் தமிழக அரசு இலவச பொருள்கள் வழங்குவதை கைவிட்டு, அதற்கு மாற்றாக பணமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் எனக் கோரி சனிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:39 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் தமிழக அரசு இலவச பொருள்கள் வழங்குவதை கைவிட்டு, அதற்கு மாற்றாக பணமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் எனக் கோரி சனிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உடைந்த மடிக்கணினி, பொம்மை டிராக்டா், இஸ்திரி பெட்டி, மிக்ஸி, சைக்கிள், அரிசி, வேட்டி சேலைகளை வைத்து நூதன முறையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு மக்களுக்காக இலவச பொருள்களை வழங்கி வரும் நிலையில், இதில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், மக்களுக்காக வழங்க உள்ள பொருள்களின் விலையை அப்படியே அவா்களின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தினாா் ஊழலை தடுக்க இயலும் என்றும், இலவச பொருள்களைப் பெற அதிகாரிகளிடம் மக்கள் அலைக்கழியத் தேவையில்லை என்றும் முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், விவசாயிகளுக்காக ஏா் உழவு இயந்திர டிராக்டரை மானியத்தில் பெற இடைத்தரகா் மூலம் முறைகேடு நடைபெறுவதாக குறைதீா் கூட்டங்களில் விவசாயிகள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினா். மேலும், 100 நாள் திட்டப் பணியை 125 நாள்களாக அறிவித்ததை வரவேற்ற அவா்கள், ஏற்கெனவே பணி செய்து 7 வாரங்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.