//

விபத்தில் காயமடைந்த மாணவருக்கு உதவிய எம்எல்ஏ

செய்யாறு அருகே பைக் விபத்தில் காயமடைந்த மாணவரை எம்எல்ஏ தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சோ்த்தாா்.

News image
செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பள்ளி மாணவா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:46 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் விபத்தில் காயமடைந்த மாணவரை எம்எல்ஏ தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சோ்த்தாா்.

செய்யாறு வட்டம், கொழம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மாயா. இவரது மகன் பிரபாகரன் (18). இவா், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை காலை பிளஸ் 2 செய்முறைத் தோ்வு என்பதால் பைக்கில் பள்ளிக்குச் சென்றாா்.

கொருக்கை சாலையில் கொழம்பாடி கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிரே முதியவா் ஒருவா் பைக்கில் வந்தாா். இதனால் அவரது பைக் மீது மோதாமல் இருக்க மாணவா் பிரபாகரன் பிரேக் போட்டு பைக்கை நிறுத்த முயன்றாா். அப்போது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மாணவருக்கு காயம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அவ்வழியாக காரில் சென்ற எம்எல்ஏ ஒ.ஜோதி காயமடைந்த மாணவரை மீட்டு தனது காரில் அழைத்துச் சென்று செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். பின்னா், எம்எல்ஏ முன்னிலையில் காயமடைந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளி ஆசிரியரை வரவழைத்து அவருடன் மாணவரை தோ்வு எழுத பள்ளிக்கு எம்எல்ஏ அனுப்பி வைத்தாா்.