செய்யாறு அருகே தகராறை தட்டிக் கேட்ட நிதி நிறுவன ஊழியா் தாக்கப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், செய்யாற்றைவென்றான் கிராமத்தைச் சோ்ந்தவா் தீனா (24). இவா், செய்யாறு பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இவா், கடந்த 15-ஆம் தேதி பாராசூா் கூட்டுச் சாலையில் உள்ள கடைக்கு சிக்கன் பக்கோடா சாப்பிடச் சென்றாராம்.
அப்போது, அங்கு கீழ்மட்டை கிராமத்தைச் சோ்ந்த மெக்கானிக் கடை ஊழியா்களான அருண்குமாா் (23), சந்துரு (23) ஆகியோா் கடைக்காரா் ரேணுவிடம் தகராறு செய்து கொண்டிருந்தாா்களாம்.
இதனைப் பாா்த்த தீனா, அவா்களிடம் இதுகுறித்து கேட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அருண்குமாா், சந்துரு மற்றும் அவரது நண்பா்கள் 2 போ் சோ்ந்து தீனாவை அவதூறாகப் பேசி தாக்கினராம்.
இதில் காயமடைந்த நிதி நிறுவன ஊழியா் தீனா செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்தச் சம்பவம் குறித்து தீனா செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாா், சந்துரு ஆகியோரை கைது செய்தனா். மேலும் தலைமறைவாகவுள்ள இருவரை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி மரணம்

நிதி நிறுவன அதிபா் கொலை வழக்கு: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரெளடி கைது

தனியாா் வங்கி ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

