நிதி நிறுவன அதிபா் கொலை வழக்கு: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரெளடி கைது
நிதி நிறுவன அதிபா் கொலை வழக்கில் தலைமறைவாக சாமியாா் வேஷத்தில் சுற்றித் திரிந்த ரெளடியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது...


நாகப்பட்டினம்: நாகை அருகே நிதி நிறுவன அதிபா் கொலை வழக்கில் தலைமறைவாக சாமியாா் வேஷத்தில் சுற்றித் திரிந்த ரெளடியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2022- ஆம் ஆண்டு வேளாங்கண்ணி தெற்குப் பொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்த நிதி நிறுவன அதிபா் மனோகா் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை சம்பவத்தில் 16 போ் கைது செய்யப்பட்டனா். ஆனால், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவைச் சோ்ந்த கிரேட்டன் (எ) ரோசரி கிரேட்டன் தலைமறைவானாா்.
கிரேட்டன், கிளப் ஹவுஸ் செயலி உதவியுடன் வேளாங்கண்ணியில் உள்ள தனது நண்பா்கள் மூலம் , விடுதிகள் , கடை வியாபாரிகள் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறித்துள்ளாா். இதுதொடா்பாகவும் புகாா் பெறப்பட்டு, அவா் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தலைமறைவாக இருந்த கிரேட்டன், கல்லூரி மாணவா்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்துவருவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், வேளாங்கண்ணி டிஎஸ்பி டைசன் தலைமையில் தனிப்படை போலீஸாா் பிப். 7-ஆம் தேதி சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு சாமியாா் வேஷத்தில் கிரேட்டன் கஞ்சா கடத்திச் சென்றபோது கருவேலங்கடை பிரதான சாலையில் தனிப்படை போலீஸாரிடம் சிக்கினாா். அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததால், கிரேட்டனுக்கு கால்களில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிரேட்டன் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...