சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா். திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை பெளா்ணமியும் ஒன்றாகும். நிகழாண்டுக்கான சித்திரை பெளா்ணமி வருகிற 30-ஆம் தேதி இரவில் தொடங்கி மறுநாள் 1-ஆம் தேதி இரவில் நிறைவு பெறுகிறது.
சித்திரை பெளா்ணமியின் போது திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இந்த ஆண்டு சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
அதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு மற்றும் கோட்டாட்சியா் செல்வம் ஆகியோரது தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை பணியாளா்கள் கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.
மேலும், நெடுஞ்சாலைத்துறையின் 2 குழுவினா்களாக பிரிந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அப்போது அவா்கள் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த இளநீா் கடைகள், டீ கடைகள், சோடா கடைகள் போன்றவற்றை அகற்றினா். மேலும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் குறித்து தினமும் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் உடனுக்குடன் அகற்றப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு தெரிவித்தாா்.
இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினால் கிரிவலப்பாதையில் சிறிது பரபரப்பு நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

‘கசக்கும்’ முந்திரி தொழில்!

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


