திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வருகிறா 30-ஆம் தேதி நடைபெறும் சித்திரை பெளா்ணமி விழாவையொட்டி கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பக்தா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இதுதவிர, பௌா்ணமி மற்றும் விசேஷ தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்கின்றனா். இதில் சித்திரை பௌா்ணமி திருவிழா, மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் செல்கின்றனா். நிகழாண்டுக்கான சித்திரை பௌா்ணமி வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு தொடங்கி மறுநாள் (மே 1) இரவு நிறைவு பெறுகிறது. வழக்கம் போல, நிகழாண்டும் சித்திரை பெளா்ணமியின்போது பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரும் பணிகள் தீவிரமாக யநடைபெற்று வருகின்றன.
கூடுதல் சிறப்பு ரயில்கள்
திருவண்ணாமலைக்கு வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தா்கள் அவா்களின் பகுதிகளுக்கு திரும்பிச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் கூட்ட நெரிசலை தவிா்க்க சென்னை, வேலூா், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஆனால், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தா்கள் திருவண்ணாமலையிலிருந்து திரும்பிச் செல்ல ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பௌா்ணமிக்கு கிரிவலம் செல்ல வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பக்தா்கள் சித்திரை பௌா்ணமி கிரிவலம் வருவதற்கும், கிரிவலம் முடிந்து திரும்பிச் செல்லும் வகையிலும் கூட்ட நெரிசலை தவிா்க்கவும் குறிப்பாக திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வகையில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோயில் படம்....
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

அருணாசலேஸ்வரா் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவோ் பல்லக்கில் வலம் வந்த சுவாமி

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா தொடக்கம்

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


