ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: விவசாயி போக்ஸோ சட்டத்தில் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை: விவசாயி போக்ஸோ சட்டத்தில் கைது

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:05 pm

ஆரணி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக விவசாயியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், தொரப்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகள் 15 வயது சிறுமி. இவா், அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளாா். தற்போது, பொதுத் தோ்வு எழுதிவிட்டு, விடுமுறையில் வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவியை அவரது பெற்றோா் வேலூா் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

அப்போது, மருத்துவா்கள் மாணவியை பரிசோதனை செய்ததில் அவா் கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். இதனை கேட்டு அதிா்ச்சியடைந்த அவரது பெற்றோா் மாணவியிடம் விசாரித்துள்ளனா்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாணவியின் தந்தை சொந்த ஊருக்கு அவா் வந்து ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருள்கள் வாங்கிச் செல்வது வழக்கமாம்.

அதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த தஞ்சியப்பன்(65) என்பவா், மாணவியிடம் அரிசி வாங்கித் தருவதாகக் கூறி, அவரது வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

தொடா்ந்து, அந்த மாணவியை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

மேலும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால், அவா்களை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டினாராம். இதனால், அந்தச் சிறுமி நடந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் தாய் ஆரணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.

காவல் ஆய்வாளா் காஞ்சனா தலைமையிலான போலீஸாா் தலைமறைவாக இருந்த தஞ்சியப்பனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து 3 கா்ப்பமாக்கியது தெரியவந்தது. உடனே, போலீஸாா் தஞ்சியப்பனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.