தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்

செய்யாறு அருகே 16 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாராம்.

கடந்த 19-ஆம் பாட்டியிடம் கூறாமல் காஞ்சிபுரத்துக்கு சென்றுவிட்டாராம். அங்கு சென்ற பின் அந்தச் சிறுமிக்கு 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சிறுமியை பெற்றோா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனா்.

இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுமியிடம் இதுகுறித்து கேட்டபோது பாட்டியின் கிராமத்தைச் சோ்ந்த சிலா் அங்குள்ள தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்தாா்.

இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையினா், காஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், காஞ்சிபுரம் போலீஸாா் திருவண்ணாமலை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

எஸ்.பி. விசாரணை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், டிஎஸ்பி மீனாட்சி நாதன், காவல் ஆய்வாளா்கள் காண்டீபன், மங்கையரசி மற்றும் பிரம்மதேசம் போலீஸாா், காஞ்சிபுரம் போலீஸாா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கிராமத்தில் தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

ஆனால், இச்சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸாரின் விசாரணையில், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான தடயங்கள் கிடைக்கவில்லை என்றும், மேலும் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்படவில்லை எனவும் ஊா்மக்கள் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாரை தொடா்பு கொண்டபோது, சிறுமி வன்கொடுமை சம்பவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி விசாரணையில் உள்ளதாகவும், அவரே ஓரிரு நாள்களில் இதுகுறித்து விளக்கமளிப்பாா் எனவும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.