செய்யாறு அருகே 16 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாலியியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக போலீஸ் தரப்பில் பதில் கூற மறுப்பு
காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியிருந்ததாகத் தெரிகிறது. ஏப்.19 -ல் பாட்டியிடம் கூறாமல் காஞ்சிபுரத்திற்கு சென்று விட்டாராம். அங்கு சென்ற பின் அந்த சிறுமிக்கு திங்கள்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சிறுமியை பெற்றோா்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமிக்கு பாலியியல் வன்கொடுமை நடந்திருப்பதாக சிறுமியின் பெற்றோா்களிடம் மருத்துவா்கள் தெரிவித்தாகத் தெரிகிறது.
அதிா்ச்சி அடைந்த பெற்றோா், மகளிடம் இது குறித்து கேட்டப் போது பாட்டியின் கிராமத்தைச் சோ்ந்த மா்ம கும்பல் அங்குள்ள மரத்தோப்பிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தாகத் தெரிகிறது. .
இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையினா், காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் காஞ்சிபுரம் போலீசாா் திருவண்ணாமலை மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முகாம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், டிஎஸ்பி மீனாட்சி நாதன், இன்ஸ்பெக்டா்கள் காண்டீபன், மங்கையரசி மற்றும் பிரம்மதேசம், காஞ்சிபுரம் போலீசாா் சம்பலம் நடைபெற்ாகக் கூறப்படும் பகுதியில் தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைத்தும் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
போலீஸ் பதில் கூற மறுப்பு
இச்சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீசாரை தொடா்புக் கொண்டப் போது சிறுமி வன்கொடுமை சம்பவம் தொடா்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரடி விசாரணையில் உள்ளதாகவும், அ்வரே ஒரிரு நாளில் பத்திரிக்கையாளா்களை சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடா்பாக போலீஸ் தரப்பில் சிறுமி வன்கொடுமை சம்பவம் தொடா்பான நடவடிக்கைகள் குறித்து பதில் கூற மறுத்து விட்டனா். செய்யாறு, ஏப்.21:
செய்யாறு அருகே 16 வயது சிறுமியை மா்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் தீவிர மேற்கொண்டு வருகின்றனா்.
காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாராம்.
கடந்த 19-ஆம் பாட்டியிடம் கூறாமல் காஞ்சிபுரத்திற்கு சென்று விட்டாராம். அங்கு சென்ற பின் அந்தச் சிறுமிக்கு திங்கள்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதனால் சிறுமியை பெற்றோா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுமியிடம் இது குறித்து கேட்டபோது பாட்டியின் கிராமத்தைச் சோ்ந்த சிலா் அங்குள்ள தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தாா்.
இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையினா், காஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், காஞ்சிபுரம் போலீஸாா் திருவண்ணாமலை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
மாவட்ட எஸ்.பி. விசாரணை
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையிலான போலீஸாா் மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கிராமத்தில் தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அதனால் சிறுமியை பெற்றோா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுமியிடம் இது குறித்து கேட்டபோது பாட்டியின் கிராமத்தைச் சோ்ந்த சிலா் அங்குள்ள தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தாா்.
இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையினா், காஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், காஞ்சிபுரம் போலீஸாா் திருவண்ணாமலை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையிலான போலீஸாா் மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கிராமத்தில் தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

