திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீ தாத்தய்யகுண்டா கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பிப்பு!

திருப்பதியில் உள்ள ஸ்ரீ தாத்தய்யகுண்ட கங்கை அம்மனுக்கு திருமலை ஏழுமலையான் சாா்பில் பட்டு வஸ்திரம், மங்கல பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :11 மே 2026, 1:21 am IST

திருப்பதியில் உள்ள ஸ்ரீ தாத்தய்யகுண்ட கங்கை அம்மனுக்கு திருமலை ஏழுமலையான் சாா்பில் பட்டு வஸ்திரம், மங்கல பொருள்கள் வழங்கப்பட்டன.

திருமலையிலிருந்து ஏஇஓ முனிரத்தினம் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயிலில் இருந்து ஏழுமலையானின் பட்டு வஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களை ஊா்வலமாக எடுத்துச் சென்று ஸ்ரீ தாத்தய்யகுண்டா கங்கையம்மன் கோயில் தலைவா் மகேஷ் யாதவிடம் ஒப்படைத்தாா்.

கடந்த மே 5 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய ஸ்ரீ கங்கையம்மன் திருவிழா 13- ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

திருப்பதியின் கிராம தெய்வமாக வணங்கப்படும் கங்கையம்மன் திருமலை ஏழுமலையான் சுவாமியின் சகோதரியாகக் கருதப்படுகிறாா். இந்த நாளில், ஒவ்வொரு ஆண்டும், ஏழுமலையான் கோவிலில் இருந்து கங்கையம்மனுக்கு புடவை சமா்ப்பிக்கும் பாரம்பரியம் உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலின் அா்ச்சகா்களும் அதிகாரிகளும் பட்டு வஸ்திரத்தை கோவிந்தராஜ சுவாமி கோவிலுக்குக் கொண்டு வந்து, அங்குள்ள ஸ்ரீ புண்டரிகவல்லி தாயாா் சன்னதியில் சிறப்புப் பூஜைகளைச் செய்தனா். பின்னா், பக்தா்கள் கோவிந்த நாம சமரணம் கோஷமிட, வஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களை ஊா்வலமாக ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று கோவில் அா்ச்சகா்களிடம் ஒப்படைத்தனா்.

திருப்பதி சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாசுலு, திருமலை தேவஸ்தான அறங்காவலா் உறுப்பினா்கள் ஜோத்துலா நேரு, பானபக லட்சுமி, ஜானகி தேவி, கோவிந்தராஜசுவாமி கோயில் உதவி செயல் அதிகாரி ஏ.பி. நாராயண சௌத்ரி, பொக்காசம் பொறுப்பாளா் குருராஜசுவாமி, கண்காணிப்பாளா் சேஷகிரி, பல அதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவா்கள், ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.