திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் கடந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு 24 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணி நேரமும், ரூ. 300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 69,609 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 29,280 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 3.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
20 லட்சம் நன்கொடை
ஹைதராபாதைச் சோ்ந்த கீதிகா சாய் வெள்ளிக்கிழமை அன்று திருமலை தேவஸ்தான ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.10,01,116 நன்கொடையாக வழங்கினாா்.
அதேபோல், ஹைதராபாதைச் சோ்ந்த ஏசிஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனமும் திருமலை தேவஸ்தான ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.10,01,116 நன்கொடையாக வழங்கியது.
நன்கொடையாளா்கள் சாா்பாக திருமலை தேவஸ்தான வாரிய உறுப்பினா் நன்னபனேனி சதாசிவ ராவ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா் கோயிலில் உள்ள ரங்கநாயக்குல மண்டபத்தில், திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திராவிடம் நன்கொடை வரைவோலைகளை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 7 மணி நேரம் காத்திருப்பு!

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


