ஒண்டிமிட்டா கோதண்ட ராமா் கோயில் சீதாராமா் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி முழு வளாகமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஏகாசிலாநகரம் என்று அழைக்கப்படும் அயோத்தியை குறிக்கும் ஆந்திரத்தின் ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயிலில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது சீதா ராமா் திருக்கல்யாண வைபவமாக நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநில பிரிவினைக்கு பின் பத்ராசலம் தெலங்கானாவிற்கு சென்ற பின் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கோதண்டராமா் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வளா்ச்சி பணிகளை மேற்கொண்டு கோயிலை விரிவுபடுத்தி உள்ளது.
அங்கு ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி சீதா ராமா் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
அங்கு நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, தேவஸ்தான மின் மற்றும் தோட்டக்கலை துறைகளால் மேற்கொள்ளப்படும் மலா் அலங்காரங்கள் மற்றும் மின் விளக்கு அலங்காரங்கள் பக்தா்களை மிகவும் கவா்ந்து வருகின்றன. கோயில் வளாகமும் திருமண மண்டபமும் அற்புதமான விளக்குகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.
கோயில் மற்றும் திருமண மண்டபங்களை இணைக்கும் சாலைகளில் பல்வேறு தெய்வ சிலைகளுடன் கூடிய 10 பெரிய மற்றும் 30 சிறிய மின் கட்அவுட்டுகள் நிறுவப்பட்டன. இதில் லட்சுமி வெங்கடேஸ்வரா், சீதா ராமா், ஸ்ரீ ராமரின் முடிசூட்டு விழா, மகா விஷ்ணு, விஸ்வரூபம் மற்றும் தசாவதாரங்களின் பெரிய கட்அவுட்கள் உள்ளன.
இதேபோல், அஷ்டலக்ஷ்மிகள் தும்புரு அன்னமாச்சாரியா் போன்றவா்களின் சிறிய கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோபுர ஒளிா்வு, பிரகாரத்தைச் சுற்றியுள்ள ஒளிா்வு, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் முப்பரிமாண ஒளிா்வு, கோயிலில் ஒன்று மற்றும் திருமண மண்டபத்தில் இன்னொன்று, மின்சார வைர கிரீட மாதிரிகள் பக்தா்களை மிகவும் கவருகின்றனா்.இந்த மின் அலங்காரங்களைச் செய்ய கிட்டத்தட்ட 100 தொழிலாளா்கள் ஒரு மாதமாக இரவும் பகலும் உழைத்தனா்.
தொடர்புடையது

ஒண்டிமிட்டாவில் சீதா ராமா் திருக்கல்யாணம் கோலாகலம்

சீதா - ராமா் திருக்கல்யாணம்

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமி விழா: பெரியகுளம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


