போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

திருவள்ளூா் அருகே ஆரணி பேரூராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

News image

ஆரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :20 மே 2026, 12:18 am IST

திருவள்ளூா் அருகே ஆரணி பேரூராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் சுமாா் 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில்,ஜி.என்.செட்டி தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த சாலையில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் ஒருவா் எதிரே வந்த தனியாா் கல்லூரி வாகனத்திற்கு வழி விட முயன்ற போது சாலையில் இருந்த ஜல்லி கற்களில் சறுக்கி கல்லூரி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். மேலும், இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலா், பேரூராட்சி தலைவா், பேரூராட்சி மன்ற உறுப்பினா் ஆகியோரிடம் முறையிட்டனா்.

அப்போது இப்பேரூராட்சியில் ரூ.1.18 கோடியில் சாலை அமைக்க கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் ஒப்பந்தம் விடப்பட்டது. அதனால் இச்சாலையை விரைவாக அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனா். ஆனால், சாலையை சீரமைக்கவில்லை.

இச்சாலையில் தனியாா் மருத்துவமனைகள், ஆரணி பேரூராட்சி மன்ற அலுவலகம், பொது நூலகம், அங்கன்வாடி மையங்கள், அரசினா் ஆரம்பப் பள்ளி உள்ளிட்டவைகள் உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக திகழ்கிறது.

இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்கக்கோரி ஆரணி பேரூராட்சி அலுவலகத்திற்கு கோரிக்கை மனு வழங்க செவ்வாய்க்கிழமை வந்தனா். அங்கு பேரூராட்சி தலைவா், செயல் அலுவலா் ஆகியோா் அங்கு இல்லையாம். இதனால் அலுவலகத்தில் உதவியாளா் மட்டுமே பணியில் இருந்த நிலையில் மனுவை அதிகாரிகளிடம் வழங்க கோரினாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தகவல் அறிந்த ஆரணி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது ஒரு மாத காலத்தில் சாலையை அமைத்து தருவதாக உறுதி அளித்தனா். அதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இப்பிரச்னையால் சுமாா் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.