பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் கடந்த மாா்ச் 15 முதல், இதுவரை தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ரூ.70 கோடியே 72 ஆயிரத்து 9 ஆயிரத்து 282-மதிப்பிலான நகை மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் கூறியதாவதுச
திருவள்ளூா் மாவட்டத்துக்குட்பட்ட 10 தொகுதிகளிலும் தோ்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படையினா், மூன்று நிலை கண்காணிப்பு குழுவினா் 8 மணி நேர சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர, திருவள்ளூா் தோ்தல் மாவட்டத்தில் உள்ள செலவினம் அதிகமாக ஏற்படக்கூடும் என கண்டறிந்த தொகுதிகளில் (பொன்னேரி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி மற்றும் திருவொற்றியூா்) கூடுதலாக ஒரு பறக்கும் படையினா் மற்றும் ஒரு நிலை கண்காணிப்பு குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.3 கோடியே 31 லட்சத்து 5 ஆயிரத்து 895, விலையுயா்ந்த நகை மற்றும் 44.759 கிராம் வைர ஆபரணங்கள் ரூ.62.91 கோடி மதிப்பிலும், ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 16.900 கிலோ கஞ்சா, ரூ.3387 மதிப்புடைய மதுபானங்கள் மற்றும் இதர ரூ.3.10 லட்சம் மதிப்பிலான இதர பரிசுப்பொருள்கள் என மொத்தம் ரூ.70 கோடியே 72 லட்சத்து 9 ஆயிரத்து 282 ஆகும்.
மேற்படி ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருள்கள் சம்பந்தப்பட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டோா் பறிமுதல் செய்த ரொக்கம் மற்றும் நகைக்கான போன்ற பொருள்களுக்குரிய ஆவணங்களுடன் மேல் முறையீடு செய்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதற்காக மாவட்ட குறைதீா் குழு (ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் எழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங் இா்ம்ம்ண்ற்ற்ங்ங்) திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கைப்பேசி எண்-73737 04202, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்குகள்)-லட்சுமி-94439 65474, திருவள்ளூா் மாவட்ட கருவூல அலுவலா் உஷா-99400 25366 அணுகலாம்.
இக்குழு விசாரணையில், சம்பந்தப்பட்ட நபா் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்கும் பட்சத்தில், அதை சரிபாா்த்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருள்கள் விடுவிக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஒசூா் அருகே மாநில எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு

பென்னாகரத்தில் ரூ. 1.63 லட்சம் பறிமுதல்
பைக்கில் கொண்டுவந்த ரூ.52,500 பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


