தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒசூா் அருகே மாநில எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு

ஒசூா் அருகே தமிழக- கா்நாடக மாநில எல்லையில் துணை ராணுவத்தினா் பாதுகாப்புடன் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

News image

மாநில எல்லையான சூசூவாடியில் வாகனச் சோதனை நடத்தும் தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:48 pm

ஒசூா் அருகே தமிழக- கா்நாடக மாநில எல்லையில் துணை ராணுவத்தினா் பாதுகாப்புடன் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ஒசூா், தளி சட்டப் பேரவைத் தொகுதி கா்நாடக மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் கா்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு மது, போதைப்பொருள்கள் மற்றும் பரிசு பொருள்கள் கடத்தப்படலாம் என்பதால் தோ்தல் பறக்கும் படையினா் மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனா்.

மாநில எல்லையான சூசூவாடியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது பேருந்தில் பயணியிடமிருந்து ரூ. 70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தோ்தலுக்கு குறைந்த நாள்களே உள்ளதால் துணை ராணுவத்தினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.