மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

News image

பறிமுதல்!

Updated On :18 ஏப்ரல் 2026, 7:32 pm

சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

சேதுபாவாசத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் த.மைதிலி தலைமையில், தலைமை காவலா் எம்.அசோதிலிங்கம், காவலா் எம்.சச்சிதானந்தம் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சேதுபாவாசத்திரம் பனங்குட்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த கே.கண்ணன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் உரிய ஆவணங்களின்றி 200 ரூபாய் நோட்டுகளாக ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பேராவூரணி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.கலியமூா்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது .