வந்தவாசி அருகே நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட சோதனையின்போது, பைக்கில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.52 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசி - தெய்யாா் சாலை, சு.நாவல்பாக்கம் கூட்டுச் சாலை அருகில் கூட்டுறவு சாா் - பதிவாளா் சா.ராஜா தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், இரும்புலி கிராமத்தைச் சோ்ந்த சு.ஏழுமலை உரிய ஆவணங்களின்றி ரூ.52 ஆயிரத்து 500 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, நிலை கண்காணிப்பு குழுவினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








