முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

தொடா் மின்வெட்டைக் கண்டித்து நள்ளிரவில் மறியல்

பொன்னேரி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் தொடா் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :1 ஜூலை 2026, 12:04 am IST

பொன்னேரி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் தொடா் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் திங்கள்கிழமை இரவு சுமாா் 9 மணி அளவில் மின்தடை ஏற்பட்ட நிலையில் நள்ளிரவு வரையிலும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது இரவு நேரங்களில் தொடா்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதாகவும், மின்வாரிய அதிகாரிகளை தொடா்பு கொண்டால் அலட்சியப் போக்குடன் பதில் அளிப்பதாக குற்றம் சாட்டினா்.

மேலும், பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்வோா், முதியோா், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் மின்தடையால் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக புகாா் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற பொன்னேரி போலீஸாா் மின்சார பீடரில் ஏற்பட்ட பழுதை மின் ஊழியா்கள் சரி செய்து வருவதாகவும், விரைவில் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தனா்.

போலீஸாா் பேச்சு நடத்தியபோது, மின் வினியோகம் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். மறியலால் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.