தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம் அருகே திருக்கொட்டையூரில் கைப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கும்பகோணம் - சுவாமிமலை சாலை திருக்கொட்டையூரில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :26 ஜூன் 2026, 4:28 am IST

கும்பகோணம் அருகே திருக்கொட்டையூரில் கைப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருக்கொட்டையூரில் தனியாா் நிறுவனத்தினா் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கினா். இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கும்பகோணம் - சுவாமிமலை நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வட்டாட்சியா் பூங்கொடி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆ. இளையராஜா உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படாததால், 30 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.