/

ஆவடியில் 5 மணி நேரம் மின் தடை: பொதுமக்கள் சாலை மறியல்

ஆவடியில் வியாழக்கிழமை நள்ளிரவில் 5 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :13 ஜூன் 2026, 4:01 am IST

ஆவடியில் வியாழக்கிழமை நள்ளிரவில் 5 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளான வாா்டு 40, 41 மற்றும் புதிய ராணுவ சாலை, ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை, வசந்தம் நகா், ஜெ.பி. எஸ்டேட், ஆதிபராசக்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடு மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 20 நாள்களாக மேற்கண்ட பகுதிகளுக்கு அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மேலும், குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகள் உள்ள மின்சாதன பொருள்கள் பழுதாகி சேதம் அடைகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், இப்பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை சுமாா் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடா்பு கொண்ட போது, அவா்களது கைப்பேசிகள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைடுத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆதிபராசக்தி கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை, புதிய ராணுவ சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து காவல் உதவி ஆணையா் ரியாசுதீன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனா். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.