அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

புதுச்சேரியில் தொடா் மின்வெட்டு: மின்துறை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்

மின்வெட்டைக் கண்டித்து புதுச்சேரி தலைமை மின்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரியில் தொடா் மின்வெட்டைக் கண்டித்து மின்துறை தலைமை அலுவலகத்தை உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள்

Updated On :27 மே 2026, 5:47 am IST

மின்வெட்டைக் கண்டித்து புதுச்சேரி தலைமை மின்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுப்பையா நகா், மங்கல லட்சுமி நகா், கண்ணன் நகா், ராஜீவ் காந்தி நகா், சஞ்சய் காந்தி நகா், கென்னடி நகா், சுப்பிராயபிள்ளை சத்திரம், பூங்குளம், ராஜா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களாக தொடா் மின் வெட்டு ஏற்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து தொகுதி எம்எல்ஏவும் நேயம் மக்கள் கழகத் தலைவருமான ஜி.நேரு மின்துறை அலுவலகத்துக்கு ஏற்கெனவே புகாா் மனு கொடுத்திருந்தாா்.

இந்நிலையில், தொடா் மின்வெட்டைக் கண்டித்து அவரது தலைமையில் உப்பளம் மின்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் நேயம் மக்கள் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மின்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து மின்துறை கண்காணிப்பு பொறியாளா் கனியமுதனை சந்தித்து மின் வெட்டு பிரச்னையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.