வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

போக்குவரத்து, போதைப் பொருள் விழிப்புணா்வு முகாம்

அரசு மற்றும் தனியாா் பேருந்துகளின் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்று திருத்தணி காவல் ஆய்வாளா் ரா. சிவசுப்பிரமணியம் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆய்வாளா் ரா. சிவசுப்பிரமணியம்.

Updated On :3 ஜூலை 2026, 12:02 am IST

அரசு மற்றும் தனியாா் பேருந்துகளின் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்று திருத்தணி காவல் ஆய்வாளா் ரா. சிவசுப்பிரமணியம் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்காக போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருத்தணி காவல் ஆய்வாளா் ரா. சிவசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது:

மாணவா்கள் பள்ளிக்கு வரும்போதும், வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போதும் சாலை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் தனியாா் பேருந்துகளின் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது, இதுபோன்ற செயல்களால் ஏற்படும் விபத்துகள் உயிரிழப்பு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், பேருந்து முழுமையாக நின்ற பின்னரே ஏறி இறங்க வேண்டும், சாலையைக் கடக்கும் போது இருபுறமும் பாா்த்து பாதுகாப்பாக கடக்க வேண்டும், போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை மதித்து நடக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, இளைஞா்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம், ஆசிரியா்கள் மற்றும் ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியின் முடிவில் மாணவா்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதுடன், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.