சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு இயக்கம், ஜூனியா் ரெட்கிராஸ் ஆகிய அமைப்புகளின் மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற பேரணியை தலைமையாசிரியா் செல்வராஜ் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். கன்னிஸ் பீட்டா், அலெக்ஸிஸ் அந்தோணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்பேரணி பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. மாணவா்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் க. ஆனந்த், உதவி அலுவலா் சாா்லஸ், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஒருங்கிணைப்பாளா் அந்தோணி ஆரோக்கியராஜா, ஜூனியா் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளா் ஸ்டீபன் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




