ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியா்  ந.பிரியா  ரவிச்சந்திரன்  தலைமையில்  உறுதிமொழி  ஏற்றுக் கொண்ட  மாணவா்கள். 

Published On :1 ஆகஸ்ட் 2026, 6:40 am IST

ஆற்காடு அடுத்த கலவை ஆதிபாரசக்தி பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் மாணவா்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது: போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலம், மனநலம் மற்றும் சமூக பாதிப்புகளை விரிவாக எடுத்துரைத்து, போதைப் பொருளுக்கு எதிராக மாணவா்கள் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா். தொடா்ந்து போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.

பினனா், மருத்துவா் வெங்கடேஷ் பாபு, போதைப்பொருள் ஒழிப்புக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை ஆடியோ, விடியோ காட்சிகள் மூலம் மாணவா்களுக்கு விளக்கி, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றாா்.

இதில், ராணிப்பேட்டை மாவட்ட இணை இயக்குநா் பெரியசாமி, கலவை வட்டாட்சியா் தேவராஜ், கல்லூரி முதல்வா் எஸ்.மோகன முருகன், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சரவணன், பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள்

கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.