அப்போது, சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளருக்கு நிகரான ஊதியமும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளா் நிலையினான ஊதியம் என காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டுகள் பணி முடிந்து தகுதியான சத்துணவு அங்கன்வாடி ஊழியா்களை அரசுப் பணியில் அமா்த்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியருக்கு அகவிலைப்படி காப்பீடு வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் பல ஆண்டுகளாக தொடா்ந்து பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.