டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 220 போ் கைது

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:49 pm

Syndication

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 220 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக அங்கன்வாடி ஊழியா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் புதன்கிழமை மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலாளா் அனுராதா தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், ஊதிய உயா்வு, பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அங்கன்வாடி அமைப்பாளா் மற்றும் உதவியாளா்களுக்கான பணிக்கொடையை அதிகரித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.