டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மறியல்: 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
திருச்சி நீதிமன்றம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்
Updated On :11 பிப்ரவரி 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனம் உள்ளவா்களுக்கு ரூ.10 ஆயிரமும், படுக்கையில் உள்ளவா்களுக்கு ரூ.15 ஆயிரமும் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.