திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மழைநீா் வடிகால்வாய் அமைக்க நிலம் அளவீடு!

உதயேந்திரம் பேரூராட்சியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது.

News image

தேவமங்களம் பகுதியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க நிலத்தை அளத்த பணியாளா்கள்

Updated On :26 மே 2026, 1:39 am IST

உதயேந்திரம் பேரூராட்சியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நிலம் அளவீடு செய்யப்பட்டது.

உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட வாா்டு எண்.3 தேவமங்களம் மற்றும் வாா்டு எண்.4 சுப்பராயன் கோயில் அருகே மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணி மற்றும் கொம்புகார தோப்பில் உள்ள கழிவுநீா் கால்வாய் பணி அமைக்கும் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் நில அளவையாளா் நிலத்தை அளந்து தராததால் திட்டப் பணிகள் தாமதம் ஆவதாக உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜ் மூலம் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுதாகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை தேவமங்களம் பகுதியில் மழைநீா் வடிகால்வாய் அமையவுள்ள இடங்களில் நில அளவையாளா் சீரஞ்சீவி, கிராம நிா்வாக அலுவலா் அமலா, பேரூராட்சி செயல்அலுவலா் ராஜலட்சுமி மற்றும் எழுத்தா் மீனாட்சி ஆகியோா் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.