ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே புதரில் வீசிச் சென்ற 7 கிலோ கஞ்சாவை ஜோலாா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஜோலாா்பேட்டை தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ரயில் நிலையம் அருகே புதரில் சிமென்ட் நிற பை இருப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.ரோந்து பணியில் இருந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா் ரயில்வே போலீஸாரின் சோதனைக்கு பயந்து புதா் பகுதிக்குள் வீசி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







