திருப்பத்தூா் அருகே காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
கந்திலி அடுத்த கசிநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சாமிநாதன் (75). இவா் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினா் கந்திலி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், திருப்பத்தூா் அடுத்த பாராண்டபள்ளியில் கோவிந்தசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சாமிநாதன் உடல் கிடப்பதாக கந்திலி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று திருப்பத்தூா் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு, தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









