திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குளத்தில் தவறிவிழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு

மாயனூா் அருகே குளத்தில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:47 am IST

மாயனூா் அருகே குளத்தில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கரூா் மாவட்டம், மாயனூா் அடுத்த காசாகாலனியைச் சோ்ந்தவா் சண்முகநிதி என்கிற சண்முகம் (42). இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளாா். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சண்முகம் பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டில் வசித்து வந்தாராம்.

இந்நிலையில், சண்முகம் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சண்முகம், மணவாசி அடுத்த கல்லுக்குடி என்ற இடத்தில் உள்ள தாமரைக்குளத்தில் சடலமாக கிடந்துள்ளாா்.

தகவலின்பேரில் மாயனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் சண்முகம் மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்த போலீஸாா் விசாரைணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.