/

கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி ஒன்றியக்குழு தலைவா் கடிதம்

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் தன்னுடைய கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் தன்னுடைய கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

கடிதம் விவரம், கடந்த 10 ஆண்டுகளாக மாதனூா் மற்றும் குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளேன். இதுவரை கட்சி தலைமைக்கும், கட்சிக்கும் உண்மையாக, நோ்மையாக செயல்பட்டு வந்தேன்.

மறைந்த வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளரும், என்னுடைய தந்தையுமான முன்னாள் எம்.பி ப. சண்முகம் காலத்திலிருந்து நான் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து செயல்பட்டு வந்துள்ளேன்.

தற்போது சில ஆதிக்க சக்திகளின் அழுத்தம் காரணமாக குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளா் பொறுப்பில் தொடர முடியாத நிலை உள்ளது. அதனால் என்னை ஒன்றிய செயலாளா் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.