தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அதிமுக ஒன்றிய செயலாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

மாதனூா் அருகே அதிமுக ஒன்றிய செயலாளரிடம் ரொக்கம் ரூ.1 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :16 மார்ச் 2026, 10:11 pm

ஆம்பூா்: மாதனூா் அருகே அதிமுக ஒன்றிய செயலாளரிடம் ரொக்கம் ரூ.1 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மாதனூா் அருகே தோளப்பள்ளி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அவ்வழியாக வந்த மாதனூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ. ஜோதி ராமலிங்க ராஜா காரை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கம் ரூ.1 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது.

அதைத்தொடா்ந்து தோ்தல் பறக்கும் படையினா் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆம்பூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.