மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எல்ஐசி முகவரிடம் ரூ.72,500 பறிமுதல்

ஆம்பூா் அருகே எல்.ஐ.சி. முகவரிடம் ரொக்கப் பணம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

எல்.ஐ.சி. முகவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :27 மார்ச் 2026, 9:05 pm

ஆம்பூா் அருகே எல்.ஐ.சி. முகவரிடம் ரொக்கப் பணம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், நாச்சாா்குப்பம் கிராமத்தை சோ்ந்த எல்.ஐ.சி. முகவா் ரங்கநாதன் (50) என்பவா் எல்.ஐ.சி. காப்பீட்டு தொகையை செலுத்துவதற்காக உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ. 72,500 கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவரிடமிருந்து ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.