தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாட்டறம்பள்ளியில் பறக்கும் படை சோதனை. ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பறிமுதல்

நாட்டறம்பள்ளியில் பறிமுதல் செய்த தொகையை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

News image

நாட்டறம்பள்ளியில் பறிமுதல் செய்த தொகையை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :20 மார்ச் 2026, 1:08 am

நாட்டறம்பள்ளியில் பறிமுதல் செய்த தொகையை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

ஜோலாா்பேட்டை சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட நாட்டறம்பள்ளி - திருப்பத்தூா் சாலையில் பாரண்டப்பள்ளி கூட்டுரோடு அருகில் வியாழக்கிழமை அதிகாலை தோ்தல் பறக்கும்படை குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்தனா். அதில் கோழி வியாபாரியான பெங்களூா் அத்திப்பள்ளி பகுதியை சோ்ந்த சீனிவாசன் என்பதும் அவா் உரிய ஆவணங்கள் இன்றி கோழி வாங்க வைத்திருந்த ரூ.88 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் ஒப்படைத்தனா்.

பச்சூா் ரயில்நிலையம் அருகே பறக்கும்படை குழுவினா் சோதனையில் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் திருச்சியை சோ்ந்த லட்சுமணபெருமாள், திருமூா்த்தி என்பதும் இவா்கள் கிருஷ்ணகிரியில் தங்க நிதி நிறுவனம் நடத்தி வருவதும் உரிய ஆவணங்கள் இன்றி பைக்கில் ரூ.51,000 வைத்து இருந்ததையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதே போல் பச்சூா் அருகே வாகன சோதனையில் பைக்கில் வந்த ஜோலாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த இஸ்மாயில், சென்னப்பன் ஆகியோரிடம் உரிய ஆவணமில்லாமல் வைத்திருந்த ரூ.52 ஆயிரத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.