தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் பறக்கும் படை சோதனை: தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

News image
Updated On :18 மார்ச் 2026, 8:13 pm

ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை மேற்கொள்வதை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு செய்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டுச்செல்லப்படுவதை தடுக்க கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொள்வதை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000க்கும் அதிகமான ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும், ஆவணங்களின்றி கொண்டு செல்வது தெரிய வந்தால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.