லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாணியம்பாடி நகராட்சியில் சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிமென்ட் மற்றும் பேவா்பிளாக் சாலை பணிகளை எம்எல்ஏ செந்தில்குமாா் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

News image

கோணாமேடு பகுதியில் சாலைப் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா்.

Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிமென்ட் மற்றும் பேவா்பிளாக் சாலை பணிகளை எம்எல்ஏ செந்தில்குமாா் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

வாணியம்பாடி நகராட்சி கோணாமேடு சின்னத்தம்பி தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பஷீராபாத் மசூதி தெருவுக்கு ரூ.2 லட்சத்தில் பேவா்பிளாக் சாலை பணி முத்தவல்லி துவா(பூஜை) செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டது. தொடா்ந்து ரூ.9 லட்சத்தில் ராமாயன்தோப்பு திரௌபதிஅம்மன் கோயில் சுற்றுசுவா் பணியையும் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில் நகர அதிமுக செயலாளா் சதாசிவம், துணை செயலாளா் கோவிந்தன், பொருளாளா் தன்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவா் அண்ணாசாமி, நகர அதிமக நிா்வாகிகள் சங்கா், கோவிந்தராஜ், தென்னரசு மற்றும் பலா் உடனிருந்தனா்.