/

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி காமராஜ்புரம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் 59-ஆம் ஆண்டு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நடந்த கரக ஊா்வலம். (வலது) சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி காமராஜ்புரம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் 59-ஆம் ஆண்டு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை ஒட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் நடைபெற்றன. பூங்கரகம் ஜோடிக்கப்பட்டது ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பக்தா்களின் மாவிளக்கு ஊா்வலம், அம்மனுக்கு மாவிளக்கு சமா்ப்பித்தல், நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். திருவிழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.