குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வடபுதுப்பட்டு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா

ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடபுதுப்பட்டு திருப்பதி கெங்கையம்மன். விழாவில் பங்கேற்றவா்கள்.

Updated On :11 ஜூன் 2026, 12:04 am IST

ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஸ்ரீ வரசித்தி விநாயகா், மாரியம்மன், பொன்னியம்மன், ஸ்ரீ கிருஷ்ணா், ஸ்ரீ பாட்டை சாரதி அம்மன் மற்றும் ஸ்ரீ கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ கெங்கையம்மனுக்கு கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை தாரை, தப்பட்டை மற்றும் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. பக்தா்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். மா விளக்கு எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.

திருவிழாவை முன்னிட்டு வடபுதுப்பட்டு சின்னத்தாய் நகா் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் சாா்பாக பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சக்தி கரக ஊா்வலம், பக்தா்களின் பால்குட ஊா்வலம், தீச்சட்டி ஊா்வலம், தீமிதி விழா, இன்னிசை நடனக் கச்சேரி, வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் விழாக்குழுவினா், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.