ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பாக எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் டாக்டா் எஸ். பசுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.
மாவட்ட துணைச் செயலாளா் ஏ.ஆா். ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜோதிராமலிங்கராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளா் ஆா். மகாதேவன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகி அன்பரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










