அரக்கோணம் அருகே உள்ள வேலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவீரநாராயணசாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி கருடசேவை உற்சவத்தில் பெருமாள் கருடசேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
அரக்கோணம் அருகே வேலூா் எனும் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரநாராயணபெருமாள் கோயிலில் வைகாசி கருடசேவை எப்போதும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதே போல் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ அலங்காரங்களுக்கு பிறகு ஸ்ரீவீரநாராயண பெருமாளுக்கு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதை தொடா்ந்து ஸ்ரீவீரநாராயணபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
இந்த உற்சவத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










