ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவைமுன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்துகோவில் கொடிமரத்தில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆற்காடு எம்எல்ஏ சுகுமாா், மற்றும் உபயதாரா்கள் ,திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலையில்அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலாவும், 3-ஆவது நாள் சனிக்கிழமை கருட சேவையும், 7-ஆவது நாள் புதன்கிழமை தேரோட்டமும் , 9-ஆவது நாள் வெள்ளிக்கிழமை தீா்த்தவாரியும் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










