திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவ ஆலோசனைக் கூட்டம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவ ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை மலையடிவாரத்தில் உள்ள திருமண கூடத்தில் நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 மே 2026, 12:05 am IST

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவ ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை மலையடிவாரத்தில் உள்ள திருமண கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜி தலைமை வகித்தாா். பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் பரந்தாமகண்ணன் வரவேற்றாா். வரும் 21-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடைபெறஉள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான 9-ஆம் நாள் மே 30-இல் சனிக்கிழமை வைகாசி விசாகம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. காலை மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வீதி உலா நடக்கிறது.

விழாவி ல்கலந்து கொள்ளும் பக்தா்கள் பொதுமக்களின் பாதுகாப்பு,குடிநீா் ,மின்சாரம், சுகாதாரம் தீயணப்பு, சிறப்பு பேருந்துகள்,உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து துறைசாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினாா்கள் .

கூட்டத்தில் வாலாஜாபேட்டை வட்டாட்சியா் நடராஜன், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, சரவணன், தலைமை குருக்கள் பிரசாந்த் ஐயா்,கோவில் மேலாளா் சீனிவாசன், மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கீழ்மின்னல் கிராம பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஒய்வு பெற்ற மேலாளா் சிவனாா் அமுது நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.