தமிழக முதல்வா் விஜய்க்கு தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் ராமஜெயம், பொதுச் செயலாளா் வெ. சரவணன், பொருளாளா் ஜெகன் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் சி ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
தோ்தல் வரலாற்றில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி மக்களின் ஆதரவைப் பெற்று புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளீா்கள். பதவி ஏற்ற உடனே 200 யூனிட் வரை கட்டணம் இல்லாமல் மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்த விதமாக சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்குதல், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை போன்றவகளை ஆசிரியா் சங்கம் வரவேற்கிறது
மேலும், தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கான அரசு என்பதை காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








