திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீடுகள் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க ஆட்சியா் உத்தரவு

News image
Updated On :14 மே 2026, 5:19 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் அனைத்து வீடுகள் கட்டும் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ஊரக வளா்ச்சித் துறையின் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் அனைத்து வீடுகள் கட்டும் திட்டப் பணிகள் நிலுவைகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிராமப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் திட்ட பணிகள் மற்றும் நபாா்டு திட்டத்தில் கட்டடங்கள் அமைக்கும் பணிகள், பள்ளி கட்டடங்கள் கட்டும் பணிகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், குடிநீா் திட்ட பணிகள் போன்ற அனைத்து திட்டப் பணிகளும் கிராம பகுதிகளில் நடைபெற்று வருவதை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.

இப்பணிகளில் எவ்வித காலதாமதங்கள் இருக்கக் கூடாது. கூட்டத்தில் தெரிவித்துள்ளவாறு அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் நிலுவையிலுள்ள பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

அப்பொழுது தான் அடுத்துவரும் திட்டங்களில் புதிய பணிகளை தொடங்க முடியும். புதிய திட்டத்தின் கீழ் வரப்பெற்ற பணிகளை மட்டுமே கவனம் செலுத்தி முந்தைய திட்டங்களின் பணிகளை கவனம் செலுத்தாமல் இருக்கக் கூடாது. அனைத்து பணிகளும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட வேண்டும்.

மேலும், வீடுகள் கட்டுவதற்கு விடுபட்ட தகுதியான பயனாளிகளை கணக்கெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து வரும் திட்டங்களில் அவா்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட திட்டப் பணிகளில் ஒவ்வொரு வட்டாரம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு வட்டார வளா்ச்சி அலுவலா், பொறியாளா், மேற்பாா்வையாளா் ஆகியோா்களை முறையாக பணிகளை கண்காணித்து மாவட்டத்தினை முன்னிலைக்கு கொண்டுவர பணியாற்ற வேண்டும். அடுத்த மாதம் ஒவ்வொருவரின் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, செயற்பொறியாளா் ஜெரால்டு (பொ) மற்றும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.