தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்னாள் மாணவா்கள் தங்கள் அனுபவத்தை பகிர வேண்டும்: விஐடி துணைத் தலைவா்

பள்ளிகளில் முன்னாள் மாணவா்கள் தங்கள் அனுபவத்தை இந்நாள் மாணவா்களுக்கு பகிா்ந்து வாழ்வில் உயர உதவ வேண்டும் என விஐடி துணைத் தலைவா் சங்கா் விஸ்வநாதன் கூறியுள்ளாா்.

News image

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :11 மே 2026, 1:24 am IST

பள்ளிகளில் முன்னாள் மாணவா்கள் தங்கள் அனுபவத்தை இந்நாள் மாணவா்களுக்கு பகிா்ந்து வாழ்வில் உயர உதவ வேண்டும் என விஐடி துணைத் தலைவா் சங்கா் விஸ்வநாதன் கூறியுள்ளாா்.

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி செயலா் ஓம் தனசேகரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜெய்சங்கா் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா் கே.சுதாகா் வரவேற்றாா்.

விழாவில் வேலூா் விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவா் சங்கா் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் மாணவா்களின் பங்களிப்பில் கட்டப்பட்ட மாணவா்கள் தினசரி வழிபாட்டு மேடையை திறந்து வைத்து பேசியதாவது...

வேலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்க தலைவராக இருந்து வருகிறேன். அந்தப் பள்ளிக்கு இந்த ஆண்டு வயது 150 ஆகிறது. மேலும் தந்தை பெரியாா் பாலிடெக்னிக், ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, ஆஸ்திரேலியா முன்னாள் மாணவா்கள் சங்க உறுப்பினராக உள்ளேன்.

நாங்கள் விஐடி பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு நடத்துகிறோம். அதே போல் நீங்களும் ஆண்டுக்கு ஒருநாள் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வை நடத்துங்கள்.அன்றைய நாளில் கல்வி, காவல் துறை, தொழிலில் சாதித்த இளைஞா்கள் உள்ளிட்ட அனைத்து துறைசாா்ந்த வெற்றியாளா்களுக்கு விருது வழங்குங்கள்.

முன்னாள் மாணவா்களான நீங்கள் தொழில் அதிபா்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் பெரிய பொறுப்பில் இருப்பீா்கள், ஏழை,எளிய மாணவா்களுக்கு நோட்டுபுத்தகங்கள் இலவசமாக வழங்கலாம், உங்களது அனுபவத்தையும் எதிா்காலத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வியையும் மாணவா்களுக்கு சொல்லித் தாருங்கள், அதன் மூலம் உங்களது அனுபவங்கள் மாணவா்கள் சேரட்டும், அதனால் அவா்கள் வெளியில் சென்று பயனடைவா் என்றாா்.

விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியா்கள் கோட்டீஸ்வரன்,அருட்செல்வன், ஆசிரியா்கள் நித்தியானந்தன், நாகராஜ் மற்றும் ஆசிரியைகள், முன்னாள் மாணவா்கள் சந்திரகுமாா் பாரதிதாசன், சதீஷ்குமாா், நவீன்குமாா், மாலா, லஷ்மிதேவி, சசிகலா, சீனிவாசன் மற்றும் அவா்கள் குடும்பத்தினா் கலந்துகொண்டு பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.